Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு, புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (13) சனிக்கிழமை கல்லூரியின் அன்னை வெரோணிக்கா கலையரங்கில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. 

கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் நடைபெறவுள்ள, இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை சர்வோதய சிரமதான இயக்கப் பொதுச் செயலாளர் மருத்துவக் கலாநிதி வின்யா எஸ். ஆரியரத்னவும், கௌரவ அதிதியாக  மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு, சர்வோதய இயக்க மாகாண ஒருங்கிணைப்பாளர் ஈ.எல்.ஏ. கரீம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Post a Comment

0 Comments