Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விடுதியில் சமூக விரோத செயல்கள் இடம்பெறுவதாகக் கோரி கிரான்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிரான்குளத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
கிரான்குளம்-புதுக்குடியிருப்பு எல்லையில் உள்ள விடுதி ஒன்றை அப்பகுதியில் இருந்து அகற்றுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
குறித்த விடுதிக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விபுலானந்தா கல்வி நிலையத்திற்கு அருகில் உள்ள குறித்த விடுதியில் மதுபாவனையினால் கல்வி நடவடிக்கையினை பாதிக்கும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த விடுதியில் சமூக விரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments