Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் மோப்ப நாயிடம் சிக்கிய கஞ்சா கடத்தல்காரர்கள்!

கல்முனையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனையில் தொடர்ந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து அங்கு விசேட தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் இவ்விருவரையும் மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரைப் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 506 கிராம் கேரளக்கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட 200 கிராம் உள்ளூர்க் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்முனை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments