Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வித்தியா கொலையான அன்று வெள்ளைவத்தையில் இருந்தேன்! சந்தேகநபர் நீதிமன்றில் சாட்சியம்

வித்தியா படுகொலை செய்யப்பட்ட 13 ம் திகதி நான் புங்குடுதீவில் இல்லை கொழும்பில் நின்றேன் என, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ம் திகதி கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரத்தில் பணம் எடுத்தேன் என வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகியுள்ள சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.
இன்றைய தினம் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 9 பேர் நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்ட போது நீதிமன்றில் கருத்து தெரிவிக்க வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தின் போதே சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தான் வித்தியா படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் 13 ம் திகதி புங்குடுதீவில் இல்லை எனவும். தான் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் காலை 11 மணியளவில் பணம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை கருத்தில் எடுத்த நீதிபதி குறித்த தனியார் வங்கியிடமிருந்து கடந்த மாதம் 13 ம்,14 ம் திகதிக்குரிய ATM இயந்திர அறையின் வீடியோ கமரா பதிவை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை கைது செய்யபட்டுள்ள 9 சந்தேக நபர்களில் 2ம் கட்டமாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களில் ஒருவரே இந்த விடயத்தை கூறியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி நீதிமன்றில் கடும் வாதம்!
நீதிமன்ற வளாகத்தில் மயங்கி வீழ்ந்த வித்தியாவின் தாயார்

Post a Comment

0 Comments