இலண்டன் பழந்தமிழ்க் கலை இணையத்தின் ஸ்தாபகரும், கிராமியக் கலைஞரும், கவிஞருமான ஞானமுத்து சுப்பிரமணியம் (ஞானமணியம்) இந்தியாவில் 31.05.2015 காலமானார்.
அன்னார் மட்டக்களப்பு பழுகாமத்தை பிறப்பிடமாகவும், குருக்கள்மடத்தினை திருமண பந்தமாகவும் கொண்டதுடன் மிக நீண்டகாலமாக இலண்டனில் வசித்து வந்தார். தற்போது இந்தியாவுக்கு சென்றிருந்த போதே மாரடைப்பினால் காலமானார்.
எழுத்தாளர், பதிப்பாளர், வானொலிக் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், சமயத்தொண்டர், சமூகத்தொண்டர், சுயேட்சை மொழிபெயர்ப்பாளர் என பல்துறை பாண்டித்துவம் பெற்றவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை



0 Comments