கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 8.00 மணிக்கு ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இப்போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தொண்டர் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கடந்த 10 தொடக்கம் 15 வருடகாலமாக கடமைபுரிந்த 300க்கு மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் தரப்படவில்லை எனவும்
குறிப்பாக கடந்த 2007ம் ஆண்டிலிருந்து பலதடவைகள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியிருந்தும் இதுவரை காலமும் நிரந்தர நியமனம் தரப்படாமையினால் இப்போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்த தொண்டர் ஆசிரியர்கள்,
நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பலமுறை ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில், இன்றுமுதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுவதாக தெரிவித்தனர்.
2007ம் ஆண்டில் நேர்முகப் பரீட்சையில் தோற்றியவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். தற்போது பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட வேண்டும்,ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.




0 Comments