Home » » எம்மை பழிதீர்ப்பதை தவிர வேறேதும் நடக்கவில்லை நல்லாட்சி குறித்து மஹிந்த விசனம்

எம்மை பழிதீர்ப்பதை தவிர வேறேதும் நடக்கவில்லை நல்லாட்சி குறித்து மஹிந்த விசனம்

சிறு பான்மையான 46 ஆசனங் களை மட்டும் கொண்ட கட்சிக்கு பிரதமர் பதவி வழங் கப் பட் டுள் ளது. இது முற் றிலும் தவறான­தாகும். பிரதமர் பதவிக்கு டி.எம்.ஜயரத்ன தகுதி இல்லாவிட்டால் அதே கட்சியிலிருந்து வேறு ஒரு வரை நிய மித் தி ருக்க முடியும் என்று முன்னாள் ஜனா திபதி
மஹிந்த ராஜ பக் ஷ தெரி வித்தார்.கட்டுகஸ் தோட்டை கலுகலை விஹா ரையில் நேற்று முன்தினம் மாலை இடம் பெற்ற சமய வழிபாடு களின் பின்னர் மக்கள் மத் தியில் உரை யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
நாங்கள் இந் நாட்டில் ஒழுக்கம் மிக்க ஒரு சமூகத்தை உரு­வாக்கவே முயற்சி செய்தோம். ஆனால் அது இடை நடுவே கை நழுவி விட்டது.
இந்த நாட்டில் இடம் பெற்று வந்த கொடூர யுத் தத்தை நாங்கள் முடி வுக்கு கொண்டு வந்தோம். அதற்கு துணை யாக இருந்த அனைத்து இரா ணுவ வீரர் க ளையும் நினைவு கூரு வது நன்றி உள்ள மக்கள் என்ற வகையில் எங் க ளது கட மை யாகும். இருந்த போதும் இன்று உயர் மட் டத்தில் உள்ளவர் களே யுத்த வெற்றி தினத் தையும் மறந்து விட் டுள் ளனர்.
மேலே உள் ள வர்கள் அதனை மறக்கும் போது அதனை நினைவு படுத் து வது எங் க ளது கட மை ய ாகும். இன்று நாங்கள் அத னையே செய்து வரு கின்றோம்.
இன்று தேர்ந் தெடுத்த சில நாடு களில் மேற் கத்தேய நாடுகள் ஆட் சியை மாற்றி வரு கின் றன. அவ் வாறு மேற் கத் தேய நாடு க ளால் ஆட்சி மாற்றம் ஏற் ப டுத் தப் பட்ட நாடு களில் இன்னும் யுத்தம் இடம் பெற்று வரு கின் றது. லிபியா, சிரியா இதற்கு உதா ர­ண மாகும். இன்றும் அங்கு யுத்தம் இடம் பெற்று வரு கின் றது.
முன்னாள் ஜனா தி பதி என்ற வகையில் எனக்கு எதி ராக மக்கள் வாக் க ளித்து ஒரு புதிய ஜனா தி ப தியை நிய மித் தது உண்­மைதான். இருந்த போதும் ஒரு புதிய பிர த ம ரையும் அமைச்சர­வையும் நிய மிப் ப தற்கு எவ் வித மக்கள் ஆணையும் பெறப் ப ட­வில்லை. அப் படி இருந்தும் 46 ஆச னங் களை மட்டும் கொண்ட கட் சிக்கு பிர தமர் பதவி வழங் கப் பட்டுள்ளது. இது முற் றிலும் தவ­றா ன தாகும். பிர தமர் பத விக்கு டி.எம்.ஜய ரத்ன தகுதி இல்லா விட்டால் அதே கட் சி யி லி ருந்து வேறு ஒரு வரை நிய மித் தி ருக்க முடியும்.
நூறு நாள் வேலைத் திட்ட நல் லாட் சியில் நடந் தது என்ன? எங்கள் மீது போலிக் குற் றங்கள் சுமத்தி எம்மைப் பழி தீர்ப் பதைத் தவிர வேறேதும் நடக்க வில்லை. எங் களை பார்த்து திரு டர்கள் எனக் கூறும் நல்லாட்சி னரைப் பார்த்து நாம் அவர் களைக் கொள்ளை காரர்கள் என் றுதான் கூற வேண் டியுள் ளது.
மத் திய வங் கிக்கு புதிய அர சினால் நிய மிக் கப் பட்ட ஆளுனர் ஒரே தினத்தில் பெற்றுக் கொண்ட தரகுத் தொகை குறித்து கோப் அறிக் கையில் வெளிவர உள் ளது. கோப் அறிக்­கையை பற்றி என்னால் கூற முடியும் .
ஆனாலும் நான் இப் போ தைக்கு அதைப் பற்றி எதுவும் கூற முடி யது. ஏன் என்றால் அறிக்கை வெளிவர முன் எனக்கு எப் படி தெரியும் என என்னை விசா ர ணைக்குட் ப டுத் து வார்கள். எனக்கு ஒன் று மட்டும் கூற முடியும் எங்களை திருடர்கள் என கூறுபவர்கள் மக்களின் சொத்துகளை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரர்களாக உள்ளனர் என்பது மட்டும் உண்மையாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |