Home » » அம்பாறை மாவட்டத்தில் 80ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் இருந்தும் இதுவரை சரியான தமிழ்த்தலைமைத்துவங்கள் இல்லாமையினால் அவர்களது தேவைகள் உரிமைகள் அபிவிருத்திகள் மறுக்கப்பட்டிருந்தன

அம்பாறை மாவட்டத்தில் 80ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் இருந்தும் இதுவரை சரியான தமிழ்த்தலைமைத்துவங்கள் இல்லாமையினால் அவர்களது தேவைகள் உரிமைகள் அபிவிருத்திகள் மறுக்கப்பட்டிருந்தன

ஜனவரி 8 இல் அனைத்து இனமக்களும் இணைந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி புதுயுகம் படைத்ததுபோல் எதிர்வரும் ஆகஸ்ட் 17இல் அனைவரும் இணைந்து வன்முறையற்ற இனமதபேதமற்ற அடக்குமுறையற்ற ஜ.தே.கட்சி அரசாங்கத்தைத் தோற்றுவித்து புதுயுகம் படைப்போம். அனைவரும் வாரீர்.
முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஜ.தே.கட்சி அமைப்பாளருமான பி.தயாரத்னா பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன்பிற்பாடு இடம்பெற்றகாரைதீவுமக்களுடனான முதல்சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்தார்.
இச்சந்திப்பு சனிக்கிழமையன்று காலை காரைதீவு.3 கலைமகள் சனசமுக நிலையக் கட்டடத்தில் தயாரத்னாவின் மாவட்ட அரசியல்விவகாரங்களுக்கான இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இதுவரைகாலமும் தமிழரசுக்கட்சியின் காரைதீவுப்பிரதேச முக்கியஸ்தராகவிருந்த ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியரும் காரைதீவு மகா விஸ்ணு ஆலய தர்மகர்த்தாவுமான சு.தில்லையம்பலம்  நாவிதன்வெளிப்பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.ஆனந்தன் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் வி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு தயாரத்னா மேலும் உரையாற்றுகையில்:
ஆட்சி மாற்றத்தின்பின்பு நான் நான் பாராளுமன்றத்தில் ஜ.தே.கட்சியிலிருந்தும் எதிர்க்கட்சி ஆசனவரிசையிலேயே அமர்ந்திருந்தேன். இருதரப்பிலும் நல்லவர்களுமிருந்தார்கள் மாறானவர்களுமிருந்தார்கள். அதனாலே ஆசன அமைவிடம் என்பது முக்கியமாக படவில்லை.
எனினும் கடந்த வெள்ளியன்று பாராளுமன்ற அமர்வில் ஆளும் ஜ.தே.க. ஆசன வரிசையில் முதல்தடவையாக அமர்ந்தேன். அன்றிரவு பாராளுமன்றம் கலைந்தது. இது துரதிஸ்டமா? அதிஸ்டமா? என விளங்கவில்லை.

எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் விகிதாசாரப்பிரதிநிதித்துவ தேர்தல் முறையிலேயே  அதாவது தற்போதுள்ள தேர்தல் முறையிலே நடைபெறவுள்ளது.
அடுத்துவரும் இருவாரங்களுள் அம்பாறை மாவட்டத்தில் யார் யார் எந்தெந்தக் கட்சியில் போட்டியிடுவார் என்ற விபரங்கள் வெளியாகிவிடும். உங்கள் பிரதேசம் அபிவிருத்தியடையவேண்டுமெனின் தங்கள் தேவைகள் பூர்த்தியாகவேண்டுமெனில் இனமதபேதமற்ற ஜ.தே.கட்சியைத் தெரிவுசெய்யுங்கள்.

நல்ல தமிழ்த்தலைமைத்துவம் தேவை!
அம்பாறை மாவட்டத்தில் 80ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் இருந்தும் இதுவரை சரியான தமிழ்த்தலைமைத்துவங்கள் இல்லாமையினால் அவர்களது தேவைகள் உரிமைகள் அபிவிருத்திகள் மறுக்கப்பட்டிருந்தன.
அதனால் மாவட்டத்திலுள்ள 51 தமிழ்க்கிராமங்களிலுள்ள தமிழ்மக்களுக்கு நிறைய பிரச்சினைகளுள்ளன என்பதை நானறிவேன்.
அம்பாறை மாவட்ட தமிழ்மக்களது பிரச்சினைகள் ஆயிரமிருந்தும் தமிழ்த்தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் சர்வதேசத்துடன் கதைக்கின்றார்களாம். அப்படியெனின் இவர்களுக்காக குரல்கொடுப்பது யார்?
எனக்கு பாசை பிரச்சினையாகவிருந்தும் முடிந்தளவு விசுவாசமாக யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக குரல்கொடுத்து முடிந்த பிரச்சினையைத் தீர்த்துவருகின்றேன்.
எம்.சி.கனகரெத்தினம் போன்று நல்ல தலைமைத்துவங்கள் உருவாகினால் நான் ஒதுங்கிவிடுவேன். நான் சகல இனங்களையும் நேசிப்பவன்.என்னை நாடிவரும் யாராக விருந்தாலும் உதவுவது வழமை.

நான் தவறணைக்கு எதிர்ப்பானவன்!
எனது 38வருட பாராளுமன்ற உறுப்பினர் காலத்தில் ஒரு தவறணைக்குகூட அனுமதி வழங்கவில்லை.தவறணைக்கு பூரண எதிர்ப்பானவன் நான்.
அம்பாறையில் எனது காலத்தில் ஒரேயொரு தவறணை இருந்தது. ஆனால் இடைப்பட்டகாலத்தில் 15தவறணைகள் உருவாகின.மாலையானதும் ஒரே நெரிசல். என்னால் முடியுமாகவிருந்தால் அவற்றை எப்போதே மூடியிருப்பேன்.
நாட்டில் மதுவுக்கு முற்றுப்பள்ளி என்ற திட்டம் கொண்டுவரப்;படபின்பு பல பியர் கடைகள் ஆரம்பமாகியுள்ளன. ஒருவர் மச்சாங் என்ற தலைப்பில் 14 பியர் கடைகள் வைத்துள்ளார். அதுகூட அல்ககோல்தானே. அதுவும் பிழைதானே.
இங்குள்ள தவறணையை மூடுமாறு மக்கள் வேண்டுகின்றனர். ஒவ்வொன்றுக்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன்.முறைப்படி சட்டப்படி அனுமதியுடன் ஒரு தவறணை நிறுவப்பட்டிருந்தால் அதனை மூடிவிட முடியாது. அனுமதியில் ஏதாவது லூப்புகள் இருந்தால் முயற்சிக்கலாம்.
thayaratna-bthayaratna-c
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |