அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஜவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்களுடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் 3பெண்களும் 2ஆண்களும் அடங்குவதாகவும் இவர்கள் ஆலையடிவேம்பு பனங்காடு உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து கைது செய்யப்பட்டதாகவும் கூறினர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.


0 Comments