பெரியகல்லாறு முதலாம் குறிச்சியில் உள்ள வீடொன்றிலிருந்து வியாழன் இரவு 10 பவுண் நகைகளும், பத்தாயிரம் ரூபா ரொக்கமும் மிகவும் சாதூரியமான முறையில் (08.05.2015) கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி வீட்டு உரிமையாளரான திருமதி சுப்பிரமணியம் சுகந்தியிடம் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
தாங்கள் சுமார் 8.30க்கு பின்னர் நித்திரைக்குச் சென்றதாகவம். காலையில் 5.00 மணியளவில் எழுந்து பார்த்தபோது அலுமாரி திறந்து கிடந்ததாகவும், அதில் இருந்த காப்பு, மாலை. கை செயினும் ரூபா 10000 பணமும் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவம் தெரிவித்தார்.
திறக்கக்கூடிய நிலையில் இருந்த (திறப்பினால் பூட்டப்படாமல்); குசினிக் கதவின் ஊடாகவே கொள்ளையர்கள் உட்புகுந்திருக்கலாமெனவும் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி பொலிசார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்
0 Comments