பட்டிப்பளை பிரதேச செயலகபிரிவில் மண்முனை வாவியை அண்டிய முதலைக்குடா மகிழடுத்தீவு கிராம சேவையாளர் பிரிவுகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இறால்பண்ணைகளை அமைப்பதை உடன்நிறுத்தி அப்பகுதியில் உள்ள மக்கள் இறால்பண்ணைகளை நடாத்த அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்தார் இதை மட்டக்களப்பு மாவட்ட அவிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.மேற்படிபகூட்டம்07/05/2015 இன்று மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் இடம் பெற்றபொது தொடர்ந்து கூறிய அரியம் எம் பி கடந்த மகிந்த அரசின்காலத்தில் முன்னால் பிரதிஅமைச்சர் முரளிதரன் சிலாபத்தில் உள்ள சிங்களவர்களுக்கு
எந்தவித முறையான அனுமதிகளுமின்றி பட்டிப்பளை பிரதேச்செயலாளரின் அனுமதியை முறைகேடான கள்ள கையொப்பம் இட்டு பத்திரம் தயாரிக்கப்பட்டு இறால் பண்ணைகள் செய்யப்பட்டுள்ளது.
இது ஊழல் நடவடிக்கையாகும் இனிமேல் கொக்கட்டிச்சோலைப்பகுதியில் உள்ளவர்கள் இறால் பண்ணைகளை அமைக்க முன் வருவோருக்குமாத்திரமே அனுமதி வழங்கவேண்டும்.வெளிமாவட்டத்தைசேர்ந்தசிங்களவர்கள்எமதுவழத்தைசுரண்ட எக்காரணம்கொண்டும்அனுமதிக்கமுடியாது எனவும் அரியம் எம் பி மேலும் கூறினார்

0 Comments