Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மன்னிப்பு வழங்கப்பட்டும் உதயசிறியின் விடுதலைக்கு மேன்முறையீட்டு மனு தடை!

சிகிரியா சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதி சின்னத்தம்பி உதயசிறிக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவரது மேன்முறையீட்டு மனு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் சிபார்சுக்கமைய அரசியலமைப்பின் 34ம் உறுப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த யுவதிக்கு விசேட மன்னிப்பு வழங்கியுள்ளார்.
உரிய மன்னிப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனத்தில் எடுத்த போது சிறைத்தண்டனை அனுபவிப்பவரால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தடையாகவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேன்முறையீடு செய்து சிறைத்தண்டனை அனுபவிப்பவர் எவருக்கும் எந்தவிதமான விசேட மன்னிப்பும் உரித்தாகாது எனவும் அந்த சிறைத்தண்டனை அனுபவிப்பவரால் மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டால் மட்டுமே மன்னிப்பு வழங்க முடியுமெனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments