நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க மரண தண்டனை அவசியப்படுவதாக சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களை தடுக்க மரண தண்டனையை அமுல்படுத்துவது அவசியம் என்பதனை விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாட்டில் அதிகளவில் கொலைகள் இடம்பெறுகின்றன.
கடந்த அரசாங்கத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
விரைவில் தூக்கு தண்டனையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments