Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை மாணவன் பலி! சிசி கமராவில் சிக்கிய விபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பிரசேத்தில் இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் 2ம் ஆண்டில் கல்வி கற்கும் கே.மதுதர்சன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் காலை தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, குறித்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவரை அவரது கணவர் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மாணவன் மீது மோதியுள்ளார்.
இதனையடுத்து மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொலிஸார் இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சி சி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments