புத்தளம்- சிலாபம் வீதி கீரியன்கல்லிய பிரதேசத்தில் இன்று காலை லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதி, 90 வயதுடைய முதியவர் மற்றும் 4 வயதுடைய ஆண் குழந்தை ஆகும்.
மேலும் விபத்தில் காயமடைந்த இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


0 Comments