Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெண் தலைமையில் இயங்கிய கொள்ளைக்குழு கைது

இலங்கையில் 6 பிரதேசங்களில் கடந்த ஆறு மாதங்களில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட செல்வந்தர்களின் வீடுகளில் கொள்ளையிட்ட ஆயுத குழுவொன்றை சேர்ந்த 23 பேரை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வாவின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிபத் கொட, வாத்துவ, அம்பலாங்கொட , ஹொரணை, ஜா-எல போன்ற பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிகளை காட்டி அச்சுறுத்தி பணம், மாணிக்கற்கள், தங்க ஆபரணங்களை இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.
இந்த கொள்ளைக் கூட்டத்தை அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே வழிநடத்தியுள்ளார்.
கொள்ளைக் குழுவின் உறுப்பினர்கள் 6 பேர் எனவும் 17 பேர் அவர்களின் உதவிக்கு செல்லும் நபர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் இவர்கள் பெரும் கொள்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பலங்கொட போவத்தையில் உள்ள மாணிக்ககல் வர்த்தகரின் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு கிடைத்ததை அடுத்து விசாரணைகள் மேவன் சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களில் ஒருவருக்கு 11 மனைவிகள் இருப்பதாகவும் கொள்ளையில் ஈடுபட்ட பின்னர் இவர்கள் இந்தியாவுக்கு மூன்று வார பயணத்தை மேற்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments