ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தோரால் 9 வயது சிறுமியொருவர் மோசமாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் இச்சம்பவத்தில் ‘யாசிடி; இனச் சிறுமியொருவரே வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளதாகவும் , அவரது உடல் நிலை மோசமாக உள்ளமையால் பிரசவத்தின் போது அவர் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அண்மையில் தமது பிடியிலிருந்த 200 யாசிடி இனத்தவரை விடுவித்திருந்தனர். அவர்களில் ஒருவரே குறித்த சிறுமியெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த வேறு பல பெண்களும் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும் இவர்களின் எதிர்கால வாழ்வும் கேள்விக்குறியாகவுள்ளதாக தன்னார்வ அமைப்புகள் குறிப்பிடுகின்றன.


0 Comments