சியோல் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
42 வயதாகும் லிப்பெர்ட் உணவகத்தில் சந்திப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருந்த வேளை,திடீரென வந்த நபரொருவர் அவரை முகத்திலும் இடது கையிலும் கத்தியால் தாக்கினார்.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தக் காயங்களால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரிய தேசியவாதத்தில் தீவிரப் பற்றுக்கொண்ட 55 வயது நபர் ஒருவர்தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
தென் கொரியாவும் வட கொரியாவும் இணைய வேண்டும் என அவர் கத்தியதாகவும் கூறப்படுகிறது.
அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.



0 Comments