Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தம்

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 
அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சீன உதவியுடன் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், அதுவரையில் பணிகள் இடைநிறுத்தப்பட உள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் பணிகள் மறு அறிவித்தல் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments