Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவூதி அரச குடும்பம்: திடுக்கிடும் தகவல்!


உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகர  இரட்டை கோபுர தாக்குதல் பின்னணியில் சவூதி அரச குடும்பம் இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2001ஆம்  ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தத்  தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இவர் நீதி மன்றத்தில்  வாக்கு மூலம் அளித்தார்.

அதில் அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தின் முக்கிய அதிகாரிகள்  குறிப்பிட்ட அளவு நிதி உதவி அளித்தார்கள் என்று  தெரிவித்துள்ளார்.

அந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை சவூதி அரேபியா அரசு திட்ட வட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சவூதி  அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மன்னர் குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது.

Post a Comment

0 Comments