Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் புகையிரதத்தில் மோதுண்டு பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – செங்கலடிக்கும் இடைப்பட்ட புகையிரதப் பாதையில் புகையிரதத்தில் மோதுண்ட இரு இளைஞர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றொருவர், படுகாயமடைந்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் செங்கலடியைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற இளைஞனே பலியாகியுள்ளதுடன் கே. பிறேமானந்த் (வயது 15) எனும் செங்கலடியைச் சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

Post a Comment

0 Comments