கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமாக இருந்த ஹாபீஸ் நசீர் அஹமட் இன்று மாலை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும்இ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் குறித்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தில் பிரச்சினை காரணமாக மாகாணசபையின் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் முதலமைச்சர் பதவியை வகிப்பது தொடர்பான முறுகலை அடுத்து அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதனையடுத்தே தற்போது முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து குறித்த நியமனம் இடம்பெற்றுள்ளது
0 Comments