Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

அரசாங்கம் முன் வைத்த இடைக்கால வரவு செலவு திட்டமானது, மக்களுக்கான 99 சதவீத வரவு செலவு திட்டமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம், மக்களுக்காக ஒரு சதவீத வரவு செலவு திட்டத்தையே முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருட்டு, மோசடி அற்ற போட்டி பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப, அனைவருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments