பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவினை வழங்கும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு பூராகவும் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது, அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு பிரதேசங்களிலும் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று (04) ஆரையம்பதி தொடக்கம் களுவாஞ்சிக்குடி வரையிலான பிரதேசங்களில் பிரச்சார பணிகளை மேற்கொண்டு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்தப் பிரச்சாரப் பணிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, அரியநேத்திரன், யோகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம், துரைரெட்ணம், பிரசன்னா, வெள்ளிமலை, கருணாகரம், நடராசா ஆகியோருடன் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தங்களுக்கு வரவேற்பினை வழங்குவதோடு மாற்றத்திற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் அதற்காகவே அவர்கள் வாக்களிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் பிரச்சார வேலைப்பாடுகளில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.





0 Comments