தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள். மணித்தியாலங்களில் குறிப்பிடுவதானால் இன்னும் 192 மணி நேரங்களே எஞ்சி இருக்கின்றது.
மழை ஓய்ந்து கால நிலை ஓரளவு சீர்பட்டிருக்கின்றது. ஜனவாரி 8ம்திகதி நெருங்க நெருங்க அரசியல் அரங்குகள் சூடேறிவருகின்றது. இந்தக் கொதிப்பான நேரத்தில் நாமும் என்ன அமைதியாக இருந்து விட முடியுமா? நமது வாசகர்களுக்கு ஏதாவது புதிய கொதிப்பான செய்திகளைச் சொல்லித்தானே ஆக வேண்டும். இந்த நாட்டில் எந்த ஒரு ஊடகமும் இதுவரை பார்க்காத ஒரு கோணத்தில் இந்த வாரம் எமது கவனத்தை அல்லது கதையை இலக்கங்களின் ஊடாக அல்லதுபுள்ளி விபரங்களின் ஊடக கணக்குப்போட்டுப் பேசலாம்- பார்க்கலாம்என்று தோன்றுகின்றது.
நமது நாட்டின் குடித்தெகை 20 மில்லியன்
இதில் 15 மில்லியன் பேருக்கு வாக்குரிமை
அதாவதுகுடிகளின் நான்கில் மூன்று பேர் வாக்காளர்.
அதில் 72 சதவீதம் சிங்களவர்
இலங்கைத் தமிழர் 12சதவீதம்.
முஸ்லிம்கள் 9 சதவீதம்.
இந்தியத் தமிழர் 6 சதவீதம்.
இனரீதியிலானஉணர்வுகள்
நமது நாட்டைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் இனங்களிடையே காணப்படுகின்ற உணர்வுகள், அந்த உணர்வுகளுக்கான பின்னணிகள், நாம் யாருக்கு வாக்குப்போட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கக் காரணங்களாக அமைகின்றது என்பது கட்டுரையாளனின் கணிப்பாக இருக்கின்றது.எனவே 2015ம் தேர்தலில் இனரீதியிலான உணர்வுகள்தான் இந்த முறை யார் ஜனாதிபதி என்பதனைத் தீர்மானிக்க போகின்றது.
கடைசி நேரப் பிரசாரஉத்திகள்
மேற் சொன்ன பிரதான காரணத்தக்குப் புறம்பாக தேர்தல்களில் மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சார உத்திகள் குறிப்பாக கடைசிக் கட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றவித்தியாசமான பிரச்சாரங்கள்
வேட்பாளரின் வெற்றியில் தாக்கத்தை செலுத்தும். இது நேரடி நடவடிக்கைகளாகவும் மறைமுக நடவடிக்கைகளாகவும் உளவில் தாக்குதல்களாகவும் கூட அமைய முடியும். எனவே மஹிந்த-மைத்திரி தரப்பில் கடைசி நேரத்தில் இதுவிடயத்தில் என்னவிதமான உத்திகளைக் கையாளப்போகின்றார்கள் என்பதனை இன்னும் சில நாட்களில் பார்க்க முடியுமாக இருக்கும்.
தளம்புகின்ற வாக்காளர்கள்
எந்தவொரு தேர்தலிலும் தளம்புகின்ற வாக்காளர்களே அனேகமா வெற்றியைத் தீர்மானிப்பார்கள். எனவே தளம்பலான வாக்காளர்களின் மனமாற்றங்களுக்கான திட்டங்களை முன்வைக்கின்ற வேட்பாளர் அல்லது அணி எந்தவொரு தேர்தல்களிலும் அதிகமான அறுவடைகளைப் பெற்றக் கொள்ள முடியும். எனவே தளம்புகின்ற வாக்களர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எண்ணிக்கையின் அடிப்படையில் 15 சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் மிடையில் இருப்பார்கள்.இது நமது வாக்களர்களின் எண்ணிக்கையில் 22 இலட்சத்திற்கும் 30 இலட்சத்திற்கும் இடைப்பட்ட தொகையாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி நடவடிக்கைகள்
அரசியலில் மேற்கொள்கின்ற அதிரடி நடவடிக்கைகள், அரசியல் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணத்தற்கு இந்தத் தேர்தலையே எடுத்துக் கொண்டால் மைத்திரியை வேட்பாளராக கொண்டு வந்து நிறுத்தியது ஒரு அதிரடி நடவடிக்கை. ஆளும் தரப்பு இந்தத் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு எதிரான வேட்பாளர் ரணில் என்றுதான் கணக்குப் போட்டு வேலைகளைத் துவங்கி இருந்தது. ஆனால் ஆளும் கோட்டைக்குள்ளிருந்தே ராஜபக்ஷவுக்கு எதிரான போட்டியாளர் பூதமாக வெளியே வந்தார். தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்கள் இருக்கின்ற போது அரசியிலில் இது போன்று நடக்கின்ற அதிரடி மாற்றங்கள்-பிரச்சாரங்கள் வேட்பாளர்களின் வெற்றியில் தாக்கங்களைச் செலுத்தும் மற்றுமொரு காரணியாக இருக்கின்றது. எனவே ஆளும் தரப்பு மற்றும் எதிரணி இந்தத் தேர்தலில் மேற்கொள்கினறஇறுதி நேர அதிரடி நடவடிக்கைகளும் தேர்தல் முடிவுகளில் தாக்கங்களைச் செலுத்தும். எனவே ஆளும் தரப்பும் எதிரணியும் மேற்கொள்ளவிருக்கின்ற அதிரடி நடவடிக்கைகள் எப்படி அமைய இருக்கின்றது என்பதனையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
இறுதிநேரப் போலிப்பிரச்சாரங்கள்
இந்தத்தேர்தலில் இறுதிநேரப் போலிப்பிரச்சார நடவடிக்கைகளை மேற் கொள்ள இரு தரப்பினரும் முனைவார்கள். எனவே அப்படி மேற்கொள்கின்ற போலிப்பிரசாரங்கள் எந்தளவுக்கு நம்பகத்தன்மையாக இருக்கின்றது, எத்தளை நாளைக்கு எத்தனை மணித்தியாலங்களுக்கு அந்த பிரச்சாரங்கள் உயிர் வாழ முடியும் என்பதiiனைப் பொறுத்தும் வாக்களர்களிடையே மாற்றங்கள்-தடுமாற்றங்கள் நிகழ இடமிருக்கின்றது.
ஆளும் தரப்பிலிருந்து 50 போர் 60 பேர் வரை கட்சிதாவ இருக்கின்றார்கள் என்று, எதிரணியினர் இதோ வருகின்றார்கள் அதோ வருகின்றார்கள் என்று முன்னெடுத்த பிரச்சாரத்தைஇதற்கு உதாரணமாகக்கூறலாம். ஆனால் நாம் ஒரு மதத்திற்கு முன்பே எதிர்க் கட்சி சொல்கின்ற எண்ணிக்கையில் அந்தத் தாவல்கள் இல்லை என்று அடித்துக் கூறி இருறந்தோம். சில தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பிற்குத் தாவிய ஐ.தே.க.செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மைத்திரி செய்து கொண்ட உடன்பாடு என்று ஒரு கடிதத்தை தற்போது ஊடகங்கள் முன்னே காட்டி அதில் மைத்திரியும் ரணிலும் கையெழுத்தப் போட்டிருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்.வடக்கில் இராணுவ முகாங்கள் மூடப்படுவது தொடர்பாகவும், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளைத் திருப்பி ஒப்படைப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கின்றது என்று பிரச்சாரங்களைப் பண்ணிக் கொண்டிருக்கின்றார் திஸ்ஸ.
தங்களுடையபோலிக்கையொப்பங்களுடன் திஸ்ஸ அத்தநாயக்க இப்படி ஒரு உடன்பாடு என்ற கடிதத்தைத் தயாரித்துக் கொண்டு வாக்காளர்களை பிழையான வழிக்கு இட்டுச் செல்கின்றார். இது தேர்தல் விதிகளுக்கு முறனான நடவடிக்கை,இதுவிடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி-ரணில் தரப்பில் தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அவர்கள் முறைப்பாடுகளைத்தற்போது கொடுத்திருக்கின்றார்கள். அத்துடன் மைத்திரி 2500 மில்லியன் (250 கோடி ரூபாய்) நஷ்டயீடு கோரி திஸ்ஸ மீது வழக்குத் தாக்கள் செய்ய ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார் என்று தெரிகின்றது.
தனது கையெப்பம் இதில் எப்படி ஸ்கேண் பண்ணிப் புகுத்தப்பட்டது என்று மைத்திரி கூறுகின்றார். ரணில் ஒட்டுமொத்தமாக இது என்னுடைய கையொப்பமே இல்லை என்று அடித்துக் கூறி இருப்பதுடன் அவர்கள் இப்போதுஇது விடயமாக சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் தற்போது ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றார்கள். எனவே இது போன்றபிரச்சாரங்கள் இந்தத் தேர்தலில் இரு பக்கதிலும் முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.
மஹிந்த-மைத்திரி வெற்றி வாய்ப்பு
என்னதான் மைத்திரி வரவால் எதிரணியினர் உற்சாகமாக நின்றாலும் ஆளும் சுதந்திரக் கட்சி கிராம மட்ட மக்கள் ஆதரவு இன்னும் கனிசமாக ராஜபக்ஷவுக்கே இருந்து வருகின்றது. மேலும் அரச வளங்கள் மற்றும் அரச ஊடகஙளைத் தற்போது ஆளும்தரப்பு தனக்குச் சாதகமாகவே முடக்கி விட்டிருக்கின்றது. என்னதான் எதிர்க் கட்சிகள் கட்அவுட்போஸ்டர்கள்தொடர்பான விமர்சனங்களைச் செய்தாலும் பார்க்குமிடமெல்லாம் மஹிந்த இருப்பதால் களம் ராஜபக்ஷவுக்குச் சாதகமாக இருக்கின்றது என்று மக்கள் மனதில் ஒரு எண்ணக்கரு தோன்ற இடமிருக்கின்றது. இது வாக்காளர்கள் மனதில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். பொதுவாக நோக்கின்ற போது இன்னும் மைத்திரி நடத்தம் அரசியல் பேரணிகளுக்கு வருகின்ற கூட்டங்களை விட ராஜபக்ஷவின் கூட்டங்களுக்குத்தான் அதிகளிவில் மக்கள் கூடி வருவதை அவதானிக்க முடிகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மைத்திரிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தால் அதனை ஆளும்தரப்பு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். மைத்திரிக்கு புலி முத்திரையைப் பதிக்கும்.இதனால் சிங்கள மக்கள் மத்தியில் கனிசமான அளவு மனமாற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது. சிங்கள மக்கள் மத்தியின் இன்னும் சமூக மட்டத்தில் மலை நாட்டுச் சிங்களவர்கள் கரை நாட்டுச் சிங்களவர்கள் என்ற உணர்வுகள் இருந்து வருகின்றது.இந்த உணர்வுகள் கூடஇந்தத் தேர்தலில் ஆதிக்கத்தைச் செலுத்த இடமிருக்கின்றது.
பலம் வாய்ந்த பிரச்சார இயந்திரத்தை வைத்திருக்கின்ற ஜேவிபி நேரடியாக எதிரணிக்காக களமிறங்கி வேiலை பார்க்காமல் இருப்பது ராஜபகஷவுக்கு இன்று வரை நல்லதொரு வாய்பைக் கொடுத்திருக்கின்றது. மைத்திரியின் பிரச்சார நடவடிக்கைகளில் கனிசமான ஓட்டை உடைசல்கள் இருந்து வருவது ராஜபக்ஷவுக்கு வாய்ப்பாகவுள்ளது.இந்தப் பலயீனங்களை அவர்கள் கடைசி நேரம் வரை சரி செய்ய மாட்டார்கள் என்பதுதான் இவன் கருத்து. மேலும் ஒரு ஆட்சி மாற்றம் அவசியம் என்ற புத்திஜீவிகளின் எதிர்பார்ப்புக்கள். ஆளும் தரப்பு அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் அடவடித்தனங்கள் என்பனவும் ராஜபக்ஷ மீதான நல்லெண்ணத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதன் பிரதிபளிப்பு இந்த ஜனாதிபதித்தேர்ததலில் வெளிப்பட இருக்கின்றது.
நாம்மேற்சொன்ன மஹிந்தவின் பேரணிக்கு அதிகளவில் மக்கள் கூட்டம் எப்படிச் சேர்க்கப்படுகின்றது என்ற விடயத்தில் இலவசப் போக்குவரத்து,கூட்டத்துக்கு வருபவர்களுக்கு பணம், சாப்பாட்டுப்பார்சல்கள் என்று வழங்கப்படுவதால் அங்கு கூடுகின்ற கூட்டங்களைபற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று எதிரணியினர் குறிப்பிடுகின்றார்கள். எந்த விதமான எதிர்பார்ப்புக்களுமின்றி நெருக்குதல்களுக்கு மத்தியில் எமது கூட்டங்களுக்கு மக்கள் உணர்வு பூர்வமாக ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொள்கின்றார்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அவர்கள் வாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.
அண்மையில் நடந்த தொலைக் காட்சி விவாதமொன்றின் போது இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிளிநொச்சி டிப்போவிலிருந்தும் பஸ்வண்டிகளில் ஆட்கள் எடுத்துவரப்பட்டார்கள் என்று அமைச்சர் பவித்திர வன்னியாரச்சியிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார் என்பதனை அவதானிக்க முடிந்தது. மைத்திரி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தின் நடை முறை தொடர்பாக கால அட்டளையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய அரசியல் திருத்தம், அரச ஊழியர்களுக்கான 10000 சம்பள அதிகரிப்பு அது வழங்கப் பட இருக்கின்ற ஒழுங்கு, அத்தியவசியப் பொருட்களின் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு, சுயாதீனமான ஆணைக்குழுக்கள், கல்விக்கு ஆறுவீதம் என்பன கவர்ச்சியான திட்டங்களாக இருக்கின்றது.
ஆளும்தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் விஞ்ஞாபனம் 23ம் திகதி வெளியிடப்படும் என்று சொல்லபட்டது. ஆனால் ஊடகங்கள் ராஜபக்ஷ விஞ்ஞாபனம் சொல்லப்பட்டது போன்று 23ம் திகதி வெளிவராது என்று குறிப்பிடப்படிருந்தது. அதனை உறுதி செய்கின்றவாறு ஆளும் தரப்பு வேட்பாளரின் தேர்தல் ஏற்பாடுகளைக் கவனிக்கின்ற முக்கிய புள்ளியான அமைச்சர் டலஸ் அலகப்பெரும 26ம் திகதிதான் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவோம் என்று பகிரங்கமாக கூறி இருந்தார். ஆனால் அவர் கூற்றுக்குமுறனாக அடுத்த நாள் அதாவது 23ம் திகதியே முன்பு குறிப்பிட்டது போல் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் விஞ்ஞபனம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிப்பட்டது. இந்த முறன்பாடான தகவலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் இன ரீதியிலான உணர்வுகளின் அடிப்படையில்தான் தமது வாக்குகளைப் பதிவு செய்வார்கள். இந்தப் பின்னணிகளை வைத்து நாம் மேற் கொண்ட ஆய்வுகளின் படி தேர்தல் முடிவுகள் எப்படி அமைய முடியும் என்பதனை இங்கு நமது வாசகர்களுக்காகத் தொகுத்துத் தருகின்றறோம். எமது கணிபுப்படி மஹிந்த-மைத்திரி ஆகியோருக்கிடையே கடுமையான போட்டி நிலவுகின்றது என்று தெரிகின்றது.கடந்த மேல், தென், மற்றும் ஊவா மாகாணசபைத் தேர்தல்களில் நாம் கூறிய எதிர்வு கூறல்கள் எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமைந்திருந்தது என்பதனை நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலை விட 2015ஜனாதிபதித் தேர்தலில் 955990 வாக்காளர்கள் எண்ணிக்கை இந்த முறை அதிகரித்திருக்கின்றது. இந்த இடத்தில் ஒரு குறிப்பை சொல்ல வேண்டும் போல் இருக்கின்றது. ஆளும் தரப்பு ஊடகமொன்றில் கருத்துப்பறிமாறல் ஒன்றிற்கு வந்திருந்த பிரபல கலைஞர் ஒருவர் கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலை விட இந்த முறை 2015 தேர்தலில் 25 இலட்சம் புதிய வாக்காளர்கள் வந்து சேர்ந்திருக்கின்றார். அந்த இஞைர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரித்தேவாக்களிப்பார்கள் என்று அங்கு குறிப்பிட்டு ஜனாதிபதி வெற்றி வாய்ப்புப் பற்றி பேசி இருந்தார்.
யாரும் யாருக்கும் வாக்களிப்பதைப்பற்றி எமக்கு எந்தக் கருத்தும் கிடையாது அது அவர்களது உரிமை. ஆனால் பிரபலஒரு கலைஞர் கூட இந்தளவு கிணற்றுத் தவளையாக இருக்கின்றாரோ? அல்லது தனது தரப்புக்காக வக்காளத்துவாங்க கண்ணை மூடிக் கொண்டு இந்தளவு புளுகைக் கட்டவிழ்த்து தனது வாதத்தை முன்வைத்து மக்களை ஏமாற்ற முனைகின்றாரோஎன்பதனைப் பார்க்கும்போது நமதுஅரசியல்வாதிகளை விட இந்தக் கலைஞர் நடவடிக்கை கீழ்த்தரமாக இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.இத்தக் கலைஞர் ஒரு பட்டதாரியும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கிலே கதை சொல்வாதாகத்தானே முகப்பில் சொல்லி இருந்தோம் அந்தக் கதைக்கு இப்போது வருவோம்.முதலில் 2010 தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருந்தது என்பது பற்றி இப்போது ஒரு முறை பார்ப்போம்.
2010 தேர்தல் முடிவுகள்
மொத்த வாக்காளர்கள் 14088500100 ச.வீ
அளிக்கப்பட்ட வாக்குகள் 1049545174.49 ச.வீ
செல்லுபடியான வாக்குகள் 10393613 99.03 ச.வீ
நிராகரிக்கப்படும் வாக்குகள் 00101838 00.97 ச.வீ
மஹிந்த ராஜபக்ஷ 601593457.88 ச.வீ
சரத் பொன்சேக்கா 417318540.15 ச.வீ
வித்தியாசம் 184274917.73 ச.வீ
2010ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், இடையில் நடந்த மகாணசபைத் தேர்தல், ஹெல உறுமயவின் அதிரடி நடவடிக்கைகள், பலமான வேட்பாளராக மைத்திரி களத்தில் குதித்தமை, ஆளும் தரப்பிலிருந்து நடக்கின்ற கட்சித் தாவல்கள், பொது பல சேனா நடவடிக்கைகளின்போது அரசு கடைப்பிடித்த மெத்தனப் போக்கு சிறுபான்மை சமூகங்களுக்கு ஆளும்தரப்பு மீது அதிர்ப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஜேவிபியின் செல்வாக்கில் ஏற்பட்டிருக்கின்ற வளர்ச்சி மற்றும் அவர்களின் ராஜபக்ஷ விரோத பிரச்சாரங்கள். தொலைக் காட்சி விவாதங்களில் ஆளும் தரப்பிலிருத்து வருகின்றவர்களுக்கு ஏற்படுகின்ற சங்கடங்கள். பொது மக்களிடையேகாணப்படுகின்ற உணர்வுகள் என்ற பின்னணிகளை மையமாகக் கொண்டே எமது மதிப்பீடு அமைகின்றது என்பதனை நமது வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2015 உத்தேச வாக்களிப்பு நிலவரம்
மொத்த வாக்காளர்கள்1 5044490100ச.வீ
அளிக்கப்படும் வாக்குகள் 1143381276ச.வீ
செல்லுபடியான வாக்குகள் 1131947499 ச.வீ
நிராகரிக்கப்படும் வாக்குகள் 00113194 1 ச.வீ
இன வீதாசாரத்திற்கு ஏற்ப வழங்கப்படுகின்ற செல்லுபடியான வாக்குகின்; எண்ணிக்கை பின்வருமாறு அமைய இடமிருக்கின்றது.
சிங்கள சமூகம் 0815002172 ச.வீ
இலங்கைத் தமிழர் 0135832812 ச.வீ
முஸ்லிம்கள் 0101874609 ச.வீ
இந்திய வம்சாவலி 0067916406 ச.வீ
யார் ஜனாதிபதியாக முடியும்?
எனவே நேரடியாக எமது மதிப்பீட்டைக் கூறுவதானால் இந்தத் தேர்தலில் இனரீதியாக பின்வரும் அடிப்டையில் மக்கள் பின்வருமாறு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.
இனம் வாக்களர் மஹிந்தமைத்திரி
சிங்களவர்கள் 08150021 55-58 ச.வீ 42-45 ச.வீ
இலங்கைத் தமிழர்01358328 19-22 ச.வீ 78-81 ச.வீ
முஸ்லிம்கள் 01018746 17-20 ச.வீ 80-83 ச.வீ
இந்திய வம்சாவலி 00679164 43-46 ச.வீ 54-57 ச.வீ
மேற்சொன்ன எமது மதிப்பீடுகளை ஒரு சாரசரி நிலைக்குக் கொண்டு வந்து கணக்குப் போட்டுப் பார்கின்றபோது. பிரதான வேட்பாளர்களான மஹிந்த - மைத்திரி வெற்றி வாய்ப்பு பின்வருமாறு அமைய அநேகமாக இடமிருக்கின்றது. எனவே நமது வாசகர்களுக்ககு நேரடியாகவே இந்தக் கணக்கை நாம் இப்போது வழங்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம்.
இனம் வாக்களர் மஹிந்த ச.வீ மைத்ரி ச.வீ
சிங்களவர்கள்: 08150021 4645551 57 3504470 43
இலங்கைத் தமிழர்: 01358328 0285248 21 1073080 79
முஸ்லிம்கள்: 01018746 0193561 19 0825185 81
இந்திய வம்சாவலி: 00679164 0305623 45 0373541 55
மொத்தம் 11206259 5429983 48 5776276 51
2015 ஜனாதிபதி தேர்தல் களத்திலுள்ள இதர வேட்பாளர்கள் அனைவரும் ஒரு சதவீதம் அளவிலேயே வாக்குகளைப் பொறுவார்கள். அந்தத் தொகை 120000த் தாண்ட மாட்டாது என்பது கட்டுரையாளன் கணிப்பு. ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்படும் வாக்குகளும் ஏனைய அனைத்து வேட்பாளர்களும் அதாவது 17 வேட்பாளர்களும் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் கிட்டத்தட்ட சமனாக இருக்கும். எனவே நியாயமான ஒரு தோதல் ஜனவரி 8ல் நடைபெறுமாக இருந்தால் எமது கணிப்பீட்டின் நம்பகத்தன்மையை ஜனவரி 9ல் நமது வாசகர்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
0 Comments