Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டு அமைக்கவில்லை: நிமல் சிறிபால டி சில்வா

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சியுடன் எந்தவொரு கூட்டமைப்பையும் உருவாக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதை மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்னெடுத்துச் செல்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை கையேற்ற நிகழ்விலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பொறுத்தவரையில் தற்போது கிராமமட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்து வருவதாகவும் நிமல் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments