Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்துதான் ஆட்சி¬யமைக்க வேண்டும் எம்.ஏ.சுமந்திரன்

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் இணைந்­துதான் ஆட்­சி­ய­மைக்க வேண்டும். அதில் சிங்­கள மக்­களும் நிச்­சயம் உள்­வாங்­கப்­பட வேண்டும். ஆனால் தமி­ழர்­களை முஸ்­லிம்­களோ முஸ்­லிம்­களை தமி­ழர்­களோ விட்­டு­விட்டு கிழக்கில் நிர்­வா­கத்தை அமைப்­பது நியா­ய­மற்ற செயல் என்­பதே எமது நிலைப்­பாடு. இந்த நிலைப்­பாட்டில் நாம் உறு­தி­யாக இருக்­கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.
நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் ஏற்­பாட்டில் தபால் தலை­மை­யக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.
சுமந்­திரன் எம்.பி. தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இறு­தி­யாக நடை­பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லின்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு 11 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய தேசியக் கட்சி 4 ஆச­னங்­க­ளையும் பெற்றுக் கொண்­டன. அந்தத் தேர்­தலில் கூட்­ட­மைப்­பையும் ஐ.தே.க.வையும் விட மிக மோச­மாக அர­சாங்­கத்தை விமர்­சித்த முஸ்லிம் காங்­கிரஸ் 7 ஆச­னங்­களைப் பெற்றுக் கொண்­டது. இந்த மூன்று கட்­சி­களும் பெற்றுக் கொண்ட ஆச­னங்­க­ளையும் சேர்த்தால் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஆச­னங்­கள்தான் அதி­க­மாக இருந்­தன.
அவ்­வா­றான சூழ்­நி­லையில் கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்­னரும் பின்­னரும் எம்­முடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க வரு­மாறும் முத­ல­மைச்சர் பத­வியைத் தரு­வ­தா­கவும் நாம் பகி­ரங்­க­மா­கவே முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு அழைப்பு விடுத்தோம். முஸ்லிம் சகோ­தரர் ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராக நிய­மி­யுங்கள் என்று நாம் தெளி­வா­கவே கூறினோம். ஆனால் அந்த அழைப்பை உதா­சீனம் செய்து, மத்­தியில் தமக்­கி­ருந்த அமைச்சுப் பத­வி­க­ளுக்கும் சலு­கை­க­ளுக்கும் பிசகு ஏற்­பட்­டு­வி­டாமல் யாருக்கு எதி­ராகப் பிர­சாரம் செய்­தார்­களோ அவர்­க­ளோடு சேர்ந்தே ஒரு ஆட்­சியை அமைத்­தார்கள். கடந்த 2 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இருக்­கின்ற அந்த அமைச்­ச­ர­வையில் ஒரு தமி­ழ­ருக்குக் கூட இட­மில்லை. 5 அமைச்­சர்­க­ளிலே ஒருவர் கூட தமிழர் இல்லை. சபைத் தலை­வரோ பிரதித் தலை­வரோ கூட தமிழர் அல்ல. கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மக்­க­ளுக்கு இட­மில்­லையா? கிழக்கில் அர­சாங்கம் நிர்­வாகம் அமைக்­கின்ற போது அங்கே ஒரு தமிழ் மக­னுக்குக் கூட இட­மில்­லாமல் ஆட்சி நிறு­வப்­ப­டு­வது நியா­யமா?
7 ஆச­னங்­களைக் கொண்­டி­ருந்த முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் 11 ஆச­னங்­களைக் கொண்­டி­ருந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டையில் ஏன் ஓர் இணக்­கப்­பாட்டைக் காண முடி­ய­வில்லை? நாங்­கள்தான் முத­ல­மைச்சர் பத­வியைக் கேட்­க­வில்­லையே? குறைந்த ஆச­னங்­களைக் கொண்­டி­ருந்த உங்­க­ளுக்­குத்தான் முத­ல­மைச்சர் பத­வியைத் தரு­வ­தாக சொன்­னோமே. அப்­ப­டி­யி­ருந்தும் அங்கு ஒரு தமி­ழ­ருக்குக் கூட இட­மில்லை என்­பதைப் பற்றிக்கூட கவ­லைப்­ப­டாமல் ஒரு ஆட்­சியை அமைத்­தீர்கள். இந்த ஜனா­தி­பதித் தேர்­த­லோடு அந்த ஆட்சி முடி­வுக்கு வரு­கி­றது.
முஸ்லிம் காங்­கி­ர­ஸோடு இப்­போதும் நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். நாங்கள் உங்­க­ளுக்கு சந்­தர்ப்­பத்தைக்கொடுத்­த­போது அதை நீங்கள் ஏற்றுக் கொள்­ள­வில்லை. அது நீங்கள் விட்ட தவறு என்று சொன்னோம். அவர்­களில் சிலர் அதனைத் தவறு என்று ஏற்றுக் கொள்­கி­றார்கள். ஆனால் இன்­னொரு தடவை பெருந்­தன்­மை­யோடு விட்டுத் தரத்தான் வேண்டும் எனக் கேட்­கி­றார்கள். ஆனால் இன்­னொ­ரு­வரோ அதனைத் தவறு என்று நான் சொல்­லமாட்டேன். அது காலத்தின் தேவை­யாக இருந்­தது என்­கிறார். என்ன தேவை­யாக இருந்­தது? அமைச்சுப் பத­வி­தானே தேவை­யாக இருந்­தது. எங்­க­ளது உறுப்­பினர்கள் எமக்கு அழுத்­தங்­களைத் தந்­தார்கள். வேறு வித­மாக கிழக்கில் ஆட்­சியை அமைப்போம் எனக் கேட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்று கூட அதனைச் செய்­யலாம். ஆனால் அதனை நாம் செய்­ய­மாட்டோம்.
முத­ல­மைச்சர் பதவி வேண்டும் என்­ப­தற்­காக முஸ்லிம் மக்­களின் பெரும்­பான்­மை­யான வாக்­கு­களைப் பெற்­ற­வர்­களைப் புறந்­தள்ளி நாம் ஆட்­சி­ய­மைக்­க­மாட்டோம். ஒரு காலமும் அதனைத் செய்­ய­மாட்டோம்.
எனவே முதலில் நாம் முஸ்லிம் காங்­கி­ரஸு­டன் தான் பேசுவோம். அவர்­க­ளுடன் இணைந்தே ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தைக் கொடுப்போம் என்றே நாம் சொன்னோம். ஆனால் இப்­பொ­ழுதும் கூட அவர்கள் அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்த தயா­ரில்லை என்­பது புல­னா­கின்­றது. ஏற்­கனவே
கிழக்கில் இரண்டு வருடம் அமைச்சுப் பத­வி­களை முஸ்லிம் காங்­கிரஸ் கொண்­டி­ருந்­தது. மத்­தி­யிலும் அமைச்சுப் பதவிகளை வகித்தது. இப்போது புதிய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளைக் கேட்டுக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள்.
ஏன் உங்களிடம் கொள்கை என்ற ஒன்றே கிடையாதா? எதைச் செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்ற வரையறைகளே உங்களிடம் இல்லையா? ஏன் இவ்வளவு மோசமாக செயற்படுகிறீர்கள் என்று எமது தலைவர் அவர்களிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments