Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தப்பியோடும் அதிகாரிகளை தடுக்குமாறு குடிவரவுத் திணைக்களத்தைக் கோருகிறது எதிரணி!

ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று குடிவரவு திணைக்களத்திடம் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிரணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். சில அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக வெளியான தகவலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களிடம் தமது வீசா விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிரணியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டவர்களுக்கு எதிராக தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜித எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments