ஹாலிஎல, வேவல்ஹின்ன, மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில், 5 வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் அவ்வீடுகளில் இருந்த 11பேர் தொடர்பாக இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
|
எவ்வாறெனினும், குறித்த பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதால் மீட்புப் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். மண்ணில் புதையுண்டவர்களில் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
|
0 Comments