Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆந்திர கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவி திராவகம் வீசியதால் பரபரப்பு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் ஆத்திரம்

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நல்லபாட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில், வெங்கடரமணா என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதிய இடைவேளையின் போது கல்லூரியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கே முகத்தை மறைத்தபடி நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், தனது கையில் வைத்திருந்த திராவகத்தை எடுத்து திடீரென வெங்கடரமணாவின் முகத்தில் வீசினார். இதில் அவரது முகம் வெந்து பலத்த காயமடைந்தார்.
எனினும் அந்த இளம்பெண்ணை அவர் மடக்கிப்பிடித்தார். இந்த களோபரத்தில் அந்த இளம்பெண்ணின் கன்னத்திலும் திராவக துளிகள் பட்டது. இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண்ணின் பெயர் சவுஜனா என தெரியவந்தது.
வெங்கடரமணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நரசரோபேட்டையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அங்கே படித்து வந்த சவுஜனாவுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்போது இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் வெங்கடரமணா கடந்த ஆண்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார்.
தன்னை ஏமாற்றிய வெங்கடரமணாவை பழிவாங்கவே, சவுஜனா இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் தற்போது விசாகப்பட்டணத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments