மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிக் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ன.
நாவற்குடா, தாளங்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி, சித்தாண்டி, ஏறாவூர் உள்ளிட்ட பல பகுதிகளும் மற்றும் மட்டக்களப்பு நகரின் மாமாங்கம், சின்ன ஊறணி, சின்ன உப்போடை, திசவீரசிங்கம் சதுக்கம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம புகுந்துள்ளதோடு வீதிகளும் வெளளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று (19) காலை 8.30 மணி முதல் இன்றுகாலை (20) 8.30 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பில் 147.8, மயிலம்பாவெளியில் 98.7, பாசிக்குடாவில் 126.5 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.
இதேவேளை கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. முகாம்களை நோக்கி எல்லைப்புற மக்கள் நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜுனைட் நளீமி முதல் கட்ட நடவடிக்கையில் இடுபட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளுக்காகன முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
0 Comments