Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மகிந்தவைத் தோற்கடிக்க மைத்திரிபால சிறிசேன! - சந்திரிகாவின் திட்டம் வெற்றி?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திரைமறைவில் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகத் தெரியவருகிறது. பொதுவேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் மஹிந்த அரசுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படவுள்ளார் என அறியவருகிறது.
சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.முன்னணி அரசின் அமைச்சருமான மைத்திரிபால இன்று தமது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு எதிரணியின் பக்கம் சேருவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருடன் ஆளுந்தரப்பில் இருந்து உறுப்பினர்கள் பலரும் எதிரணியின் பக்கம் வருவார்கள் எனவும் மேலும் அறியவந்தது. எதிரணியின் தலைவர்கள் அனைவரும் மைத்திரிபாலவை பொதுவேட்பாளராகக் களமிறக்குவதற்கு நேற்று சம்மதம்' தெரிவித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. சந்திரிகாவின் அயராத முயற்சினால் மைத்திரிபால ஆளுந்தரப்பில் இருந்து எதிரணி பக்கம் சேரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments