பூகோளமயமாகும் பொருளாதாரங்களில் கல்வியும், கல்விக் கூடங்களும் என்ற தலைப்பிலான கருத்தாடல் களம் ஒன்று மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2014.11.23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிமுதல் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கள நாயகனாக அவுஸ்திரேலிய முர்டாஜ் பல்கலைக்கழகத்தின் சிரே~;ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சி.எல் அமீர்அலி கலந்து கொள்கிறார்.
மட்டக்களப்பு தமிழ் சங்கம் மாவட்டத்தில் பல்வேறு கலை கலாச்சார செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் அதன் மற்றுமொரு செயற்பாடாக பூகோளமயமாகும் பொருளாதாரங்களில் கல்வியும், கல்விக் கூடங்களும் என்ற களப் அபொருளில் அமைந்த கருத்தாடற் களம் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் எஸ்.எதிர்மன்னசிங்கம் தெரிவித்தார்


0 Comments