ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாண சபைகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுமென எதிர்வு கூறப்படுகிறது. பொதுவாக சில மாகாண சபைகளில் புதிய முதலமைச்சர்கள் பதவியேற்கும் நிலை ஏற்படுமெனவும் தெரியவருகிறது.
கிழக்கு மாகாண சபையில் ஆரியவதி கலப்பதி, விமலவீர திஸாநாயக்க ஆகியோர் உட்பட மேலும் இரு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மத்திய மாகாண சபையிலும் அநுராத ஹேரத் தலைமையில் ஏழு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஆட்சி மாற தயாராக இருப்பதாக தெரிய வருகின்றது. ஊவா மாகாண சபை உறுப்பினரான பாராளுமன்ற விவகார அமைச்சர் சுமேதா ஜயசேனவின் புதல்வர் சுமேத உட்பட மேலும் சிலர் கட்சி மாறவிருப்பதாகவும் இதனால் அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்படலாமெனவும் தெரியவருகிறது.
0 Comments