எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் அதிக வீதமான வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான மக்கள் அலை தற்போதே ஏற்பட்டுவிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் நாளை மறுதினம் (26) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுடனான சந்திப்பிற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் இந்த சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
0 Comments