மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் வாவியில் விழுந்த காதல் ஜோடியில், காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி உயிர்த் தப்பியுள்ளார்.இன்று புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை செய்யும் நோக்குடன் வாவியில் விழுந்த காதல் ஜோடியை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் காதலன் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் ராஜா (வயது – 22) என்பவரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவர் ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.இந்நிலையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே, அத்தொடர்பு ராஜாவின் மனைவிக்கு தெரிந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனால் ராஜா தனது புதிய காதலியுடன் தற்கொலை செய்யும் நோக்கில் வாவியில் குதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


0 Comments