ஊவா மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகக் களமிறங்கியும், அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, ஜனாதிபதிக்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல, அவரது அரசின் அஸ்தமனம் ஆரம்பித்து விட்டமைக்கான சமிக்ஞையுடம் கூட என்று தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க. மாபெரும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று தேர்தல்களுக்குப் பின்னர் அரசு பாவிக்கும் வார்த்தைகள் இன்று சுருட்டிக் கொள்ளப்பட்டுள்ளன.
|
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமையை மக்கள் எதிர்பார்த்தனர். அது இந்தத் தேர்தலில் நிகழ்ந்து விட்டது. எமது ஒற்றுமை இதேபோன்று நீடித்து நிலைக்க வேண்டும். அதனையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்துவரும் தேசிய தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவோம். ஊவா மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சிக்கு அமோக ஆதரவை வழங்கி வாக்குகளை அதிகளவில் வழங்கிய மக்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசு மார்தட்டியது போல் அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும் என்றார்.
ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க பதவி விலகினார்!
ஐ.தே. பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பேரவையிலுள்ள தன் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடித்தை தலைமைத்துவ சபையின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கருஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இவர், நீண்ட காலமாக கட்சியின் பொது செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய தேசிய கட்சியோடு இருந்த பேரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை, இவருடைய இராஜினாமா குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள கபீர் காசிம் மற்றும் ருவான் விஜேவர்தனவை தவிர மற்றைய அனைவரும் வேறு கட்சிகளில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தவர்களாவர். இதேவேளை இவருடைய இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]() |
0 Comments