மட்டக்களப்பு நகரின் வாவிப்பகுதியில் உல்லாசப்பிரயாணிகளை ஏற்றிவந்த சீபிளேன் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது.
வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு வந்த சிபிளேனே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
வாவியில் உள்ள கற்பாறையில் சிக்குண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது அதில் பயணம் செய்த உல்லாசப்பிரயாணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பிரயாணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சீபிளேன் சேவையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீபிளேனை திருத்துவதற்காக விமானப்படையின் தொழில் நுட்ப விமானத்தினை சீர்செய்து மீண்டும் சேவையினை ஆரம்பித்தது.

0 Comments