Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டு பாசிக்குடா கடற்கரையில் தமிழ் கலாச்சாரத் திருமணத்தில் அசத்திய வெள்ளை ஜோடிகள்

இன்றைய நவீன காலத்தில் தமிழரின் கலாச்சாரம் கானல்நீராவதுடன் பெயரளவில் மட்டும் கலாச்சாரம் எனும் நிலை உருவாகி விடும் என்கிற அச்சம் பலரிடமும் உள்ளதை யாவரும் நன்கறிவர். இலங்கை வாழ் தமிழர் என்றாலும் சரி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஆனாலும் சரி பல்வேறு பட்ட விதத்தில் புதிய நாகரீகத்தை தேடி நுகரத் தொடங்கியதே இதற்கு பிரதான காரணம். ஒரு இனம் விடுதலை பெறும் நாட்களில் அவ் இனத்தின் போராட்டத்துடன் பண்பாடு, கலாச்சாரம், மொழி முதன்மை பெறுகிறது அதற்கு தமிழ் இனம் தயாராகுமா என்பது பாரிய சவால் எனலாம். ஓரிரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடற்கரையில் வெளிநாட்டு புதுத் தம்பதிகள் தமிழ் முறைப்படி திருமணம் செய்தமை பலரது கவனத்தை ஈத்த்துள்ளதுடன் இது தமிழ் சமூகத்திற்கு நல்ல எடுத்துக் காட்டு என பலர் கூறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

Post a Comment

0 Comments