தமிழகம், திருச்சியில் இலங்கைத் தமிழர் ஒருவர், நேற்றிரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி, கருமண்டபம் பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்தச சம்பவம் இடம்பெற்றுள்ளது. செல்வேந்திரா எனப்படும் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கருமண்டபம், செல்வநகர் பகுதியில், உள்ள வீட்டுக்கு முன்பாக கத்தியால் குத்தப்பட்ட இவர், பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணமானார். பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
0 Comments