மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து கல்லூரியின் 141 ஆண்டு நிறைவினை முன்னிட்டு 3 வது தடவையாக நடாத்தும் 'மைக் நடைபவனி' இன்று 20.09.2014சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து ஆரம்பமாகியது.
இப் பவனியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும், புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போஷகருமான யோசப் பொன்னையா ஆண்டகை ஆரம்பித்து வைத்தார்.
இப்பவனியானது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அருட் தந்தை டொமினிக் சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்றதுடன்,
நடை பவனி கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக தாண்டவன்வெளிக்குச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
நடை பவனி கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக தாண்டவன்வெளிக்குச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
கல்லூரியின் பெருமைகளையும் அதன் சரித்திரத்தையும், சாதனைகளையும் எடுத்துக் காட்டும் அலங்கார ஊர்திகள், பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்ட மைக் நடைபவனி 2014 மூலம் திரும்பவும் ஒரு முறை மட்டக்களப்பு சமூகத்திற்கும், முழு இலங்கைக்கும் புனித மிக்கேல் கல்லூரியின் அருமை பெருமைகளை பறைசாற்றும் முகமாகவே இந்நிகழ்வினை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments