இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத் தொகுதிக் கிளைபுனரமைப்பு கூட்டம் வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலைஇடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்குடாத் தொகுதி கிளை தலைவருமானகி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா,
பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்புமாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆர்வளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்குடாத்தொகுதிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
நிர்வாகத் தெரிவு கல்குடாத் தொகுதியில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள்
நான்கினையும் உள்ளடக்கியதாக பகிர்வு செய்யப்பட்டது. அத்துடன் நிர்வாக
உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தவகையில் தலைவராக மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம், உப
தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் க.சௌந்தரராஜன்,செயலாளராக க.நல்லரெட்ணம், உப செயலாளராக திருமதி.மு.பொன்மணி, பொருளாளராகப.சிவநேசன் மற்றும் உறுப்பினர்களாக ந.சிவனடியான், ஜி.கேசவமேனன், கி.சேயோன்,ப.நவதீபன், க.கமலநேசன், த.சந்திரகாசன், இ.பற்குணன், எஸ்.சுதர்சன்,ஆ.பாஸ்கரன், வே.குகதாசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments