1500 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு பெரியபோரதீவு முத்து விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு புதன்கிழமை (27) நடைபெற்றது.
இவ் ஆலயத்தில் இன்று திருவுரு யந்திரம் பதித்தல், நவமணி பதித்தல், இறையுரு நிறுவுதல், உருமருந்து அணிதல் என்பன இடம்பெற்றன.
கும்பாபிஷேக பிரதம குரு வை.இ.எஸ். காந்தன் குருக்கள் தலைமையில் உதவிக் குருமாரினால் யாக சாலையில் யாகம் இடம்பெற்றது.
எண்ணெய்க்காப்பு இன்று (28) மாலை 4.00 மணியுடன் நிறைவு பெற்று வெள்ளிக்கிழமை (29) மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments