Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் கைக்குண்டு செயலிழக்கச்செய்யப்பட்டது


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடியில் நேற்று செவ்வாய் கிழமை (26) மாலை கைக் குண்டு ஒன்றினை கண்டெடுத்து அதனை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு;ள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.


ஓட்டமாவடி மாவடிச்சேனை 04 ஜச் சேர்ந்த மீராமுகைதீன் ஆயிஷா என்பவரது வீட்டின் வளவினுள் உள்ள மலசல கூடத்திற்கு அருகாமையில் இருந்து இது மீட்;கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வீட்டுத் தலைவி வழக்கம் போல் நேற்று செவ்வாய் கிழமை மாலை தமது வளவினுள் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மர்மப் பொருள் ஒன்று மலசல கூடத்திற்கு அருகாமையில் காணப்பட்டதை தொடர்ந்து வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

 பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று அதனை கைக்குண்டு என கண்டறிந்து குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவிணருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் குறித்த பிரிவினர் இன்று காலை அதனை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடபட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments