மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்களில் இருவர் பலியாகியுள்ளனர். இதேவேளை, மற்றுமொருவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்கள் குளிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில் மூன்று பேர் கடலில் மூழ்கியதுடன் ஒருவர் தப்பி வந்து தகவல் வழங்கியதை அடுத்தே அவர்களை தேடிவருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினார்கள். இவர்கள் மது அருந்திய நிலையில் காணப்பட்டதைக் கடற்கரையிலிருந்தவர்கள் அவதானித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் 23 வயது மதிக்கத்தக்கவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
0 Comments