Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் 2 கறுப்புப்பெட்டிகளும் கண்டுபிடிப்பு. ஐ.நா தகவல்

கடந்த வாரம் மாலி நாட்டில் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்த அல்ஜீரிய விமானத்தின் 2வது கறுப்புப் பெட்டியும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பதை கண்டுபிடிக்க முடியும்.

புர்கினா பாசோ என்ற நாட்டின் தலைநகரில் இருந்து கடந்த வாரம் புறப்பட்ட அல்ஜீரிய விமானம் AH5017, புறப்பட்ட ஐம்பது நிமிடங்களில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து திடீரென காணாமல் போய், அதன் பின்னர் மாலி நாட்டின் வடபகுதியில் உள்ள ஒரு இடத்தில் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 118 பேரும் பரிதாபமாக பலியாகினர். திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

விபத்துக்குள்ளான பகுதியில் பிரான்ஸ் நாட்டு மீட்புப்படையினர் ஆய்வு செய்ததில் விமானத்தின் முதல் கறுப்பு பெட்டி கிடைத்துவிட்டதாகவும், அந்த கறுப்புப்பெட்டியை மாலி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கூறப்பட்டது. இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே அவர்களும் உறுதி செய்தார்.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புக்குழுவினர் விமானத்தின் இரண்டாவது கறுப்புப்பெட்டியையும் இன்று காலை கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவலை ஐ.நா, தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இரண்டு கறுப்புப்பெட்டியும் மீட்கப்பட்டதால், விமானம் மிகச்சரியாக எதனால் விபத்துக்குள்ளானது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். இதன்மூலம் இதே மாதிரியான விபத்து எதிர்காலத்தில் வராமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments