Advertisement

Responsive Advertisement

லண்டனில் மர்மமான தீயில் இலங்கைப் பெண் மரணம்! கணவர் வைத்தியசாலையில்..

லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார். இன்று (02.07.14) அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயின் புகையினாலும் காயங்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து சென்ற தீயணப்புப் படை வீரர்கள் அதிகாலை 3.05 மணியவில் தீயைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் 55 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டு உள்ள போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவற்துறையினரால் இதுவரை பெயர் வெளியிடப்படாமையினல் இங்கு பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.
Londan-Wumain

Londan-Wumain-02

Post a Comment

0 Comments