போலி நாணயத்தாள் வைத்திருந்த நபர் ஒருவர் கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸச அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும்போது சந்தேகநபரிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 19 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்ற புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 Comments