கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து பாலமொன்றின் மீது மோதுண்டு இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றிற்கு வருகைதந்து, மீண்டும் திரும்பிச்சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
0 Comments