Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஐந்து மாணவர்கள்  உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு உணவினை உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்களுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தியேற்பட்டதை தொடர்ந்து இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார பிரிவினர் இதுதொடர்பிலான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பில் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமாரிடம் கேட்டபோது,
நேற்று இரவு வெளியில் உள்ள கடைகளில் இருந்து உணவினைப்பெற்று உண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments